பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது

0 472

சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கிடங்குகள் மீது ஏமன் ஹவுதி படையினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதன் விளைவாக பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை  உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கப்பல்கள் மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பெட்ரோலிய சரக்குகள் தற்போதைக்கு பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை தீர்க்க உதவும் என்றாலும் சவூதியில் தாக்குதலின் போது சுமார் 5.7 மில்லியன் கச்சா எண்ணெய் தீயில் சேதமடைந்துவிட்டது.

மீண்டும் எண்ணெய் உற்பத்தி நடைபெற நான்கைந்து வாரங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயரக்கூடிய சூழ்நிலையில், இந்தியாவிலும் அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments