இருடியம் மோசடி பணத்தை பங்கு பிரிப்பதில் கொலை..! வீச்சரிவாளால் கேக்வெட்டி சிக்கினர்

0 743

கோவையில் இருடியம் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுவந்த நபரை கடத்திச்சென்று கொன்று புதைத்த சம்பவத்தில் 6 மாதங்கள் கழித்து கொலையாளிகள் சிக்கி உள்ளனர். வீச்சரிவாளால் கேக் வெட்டி சிக்கிய கும்பலின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

முகநூலில் கத்தியுடன் படம் காட்டிய கோவையை சேர்ந்த 14 பேர் கும்பலில் முதற்கட்டமாக சுந்தர்ராஜன், பழனிவேல் ,ஈஸ்வரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

முதலில் வீச்சரிவாளை வைத்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியவர்கள் என்ற குற்றத்தின் பேரில் ஆயுத தடை சட்டம் மட்டுமே இவர்கள் மீது போடப்பட்டது. அவர்களிடம் போலீசார் சாமர்த்தியமாக நடத்திய விசாரணையில் ஒரு கொலை வழக்கு 6 மாதம் கழித்து துப்பு துலங்கி உள்ளது.

வீச்சரிவாளை வைத்து எத்தனை பேரை வெட்டி உள்ளீர்கள் என்று கேட்டபோது, வெட்டியதெல்லாம் இல்லை வெறும் மிரட்டல் தான் என்றுள்ளான் ஒருவன், யாரை மிரட்ட வீச்சரிவாளை பயன்படுத்தினீர்கள் என்று விசாரித்த போது, நல்லவர்களை எல்லாம் மிரட்டவில்லை, இருடியம் இருப்பதாக மோசடி செய்து தொழில் அதிபர்களிடம் லட்ச கணக்கில் ஏமாற்றி சம்பாதித்த கந்தேகவுண்டன் சாவடியை சேர்ந்த மாரிமுத்துவை மட்டும் தான் மிரட்டினோம் என்றான் மற்றொருவன், மாரிமுத்துவிடம் இருந்து எவ்வளவு பணம் பறித்தீர்கள் என விசாரிக்க, உணர்ச்சி வசப்பட்டு பணம் தந்தால் நாங்க ஏன் அவனை கொலை செய்யப்போகிறோம்..? என்று ஒப்புதல் வாக்குமூலம் போல எதிர் கேள்வி எழுப்பி கொத்தாக சிக்கிக் கொண்டனர் இந்த கொலையாளிகள் என்கிறது காவல்துறை.

பல்வேறு திருட்டு, இருடியம் மோசடியில் ஈடுபட்டு வசதியாக வாழ்ந்துவந்த மாரிமுத்துவை கடந்த 6 மாதத்திற்கு முன்பு நாச்சிபாளையத்தில் வைத்து இந்த கும்பல் கடத்தி பணம் பறிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

பணம் கொடுக்க மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தி குமணன் குன்று மலையடிவார காட்டுப்பகுதி தூக்கிச்சென்று வெட்டி கொலை செய்து புதைத்ததாக கூறி அந்த இடத்தை போலீசிடம் அடையாளம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து இந்த கொலை சம்பவத்துக்கு மூல காரணமாக இருந்த சுந்தர்ராஜன், பழனிவேல், ஈஸ்வரன் ஆகிய 3 பேர் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய காவல்துறையினர் கொல்லப்பட்ட மாரிமுத்துவின் எலும்புகூடுகளை தோண்டி எடுத்து தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் குற்றவாளிகளிடம் மிகச்சாதுர்யமாக விசாரித்தால் மட்டுமே உண்மையை வெளிக் கொண்டுவர இயலும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments