கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டண நிர்ணயக் குழு வரையறுத்த கட்டணத்தை வழங்க உத்தரவிடக் கோரி மனு

0 140

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்வி செலவை சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும். அப்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் செலவு தொகையை மட்டுமே அரசு வழங்கும் என கட்டாய கல்வி உரிமைச் சட்டப்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் அசோசியேஷன் என்ற தனியார் பள்ளி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வழங்க உத்தவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments