புதிய மோட்டார் வாகன சட்டப்படியான அபராதத்தை குறைக்க நடவடிக்கை - எஸ்.பி.வேலுமணி

0 263

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டப்படியான அபராத தொகையை குறைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் விரைந்து சாலைகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்து விட்டது என தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments