தமிழ் முறையிலான திருமணங்கள்தான் அதிகளவில் நடைபெறுகின்றன - ஸ்டாலின்

0 183

ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

சுதந்திர போராட்ட வீரரும், சமூக நீதிக்காக பாடுபட்டவருமான ராமசாமி படையாச்சியாரின் 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வி.சேகரனின் மகன் திருமணத்தை, மு.க.ஸ்டாலின் தமிழ் முறைப்படி நடத்தி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தற்போது வைதீக திருமணங்களை விட தமிழ் முறைப்படியிலான திருமணங்கள் தான் தமிழகத்தில் அதிகளவில் நடைபெறுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

8 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்த அந்நிய முதலீடுகள் குறித்து கேள்வி எழுப்பினால், முதலமைச்சருக்கு ஆத்திரமும் கோபமும் தான் வருகிறது எனவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். மேலும் இந்தி மொழியை திணிக்க முயலும் மத்திய அரசுக்கு தமிழகத்தில் அதிமுக அரசு உறுதுணையாக செயல்படுவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments