இராமசாமி படையாச்சியாரின் 102வது பிறந்தநாள் - தமிழக அமைச்சர்கள் மரியாதை

0 180

இராமசாமி படையாச்சியாரின் 102வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.

அந்த வகையில் இராமசாமி படையாச்சியாரின் 102வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள இராமசாமி படையாச்சியாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், துரைகண்ணு, கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவிமரியாதை செலுத்தினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments