6 மாநிலங்களை குறிவைத்து தீவிரவாதிகள் சதித்திட்டம்..!

0 458

ரயில்நிலையங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் தகர்க்கப் போவதாக தீவிரவாத இயக்கம் விடுத்த மிரட்டலையடுத்து ஆறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் நவராத்திரி, தசரா பண்டிகை அதனைத் தொடர்ந்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்த பண்டிகைக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான இந்து மக்கள் திரளும் இடங்களில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. ரயில்நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் குண்டுவெடிக்கும் என்ற எச்சரிக்கையால், ஆறு மாநிலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, பெங்களூர், போபால், இட்டார்சி, குருஷேத்ரா உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹரியானா உத்தரப்பிரதேசம், குஜராத்  ஆகிய 6 மாநிலங்கள் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளன.

கராச்சியைச் சேர்ந்த மசூத் அகமது என்ற தீவிரவாதியின் பெயரால் மிரட்டல் கடிதம் ஒன்று ரோட்டக் ரயில் நிலைய அதிகாரிக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடித்ததை அடுத்து அரியானா உள்ளிட்ட  6 மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments