தெலங்கானா முதலமைச்சர் வீட்டு செல்ல நாய் உயிரிழப்பு

0 378

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வளர்த்துவந்த செல்ல நாய் ஒன்று உயிரிழந்த நிலையில், நாய்க்கு மருத்துவம் பார்த்த இரண்டு கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்திரசேகர ராவ் தனது வீட்டில் செல்லப்பிராணிகளாக 9 நாய்களை வளர்த்துவந்த நிலையில் ஆசிப் அலி கான் என்பவர் அவற்றை பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில், அவற்றுள் சைபீரியன் ஹஸ்க்கி வகையைச் சேர்ந்த 11 மாத நாய் ஒன்று உணவு உட்கொள்வதை திடீரென நிறுத்தியுள்ளது.

இதையடுத்து பஞ்சாரா ஹில்ஸ் சாலையில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனை ஒன்றுக்கு அந்த நாய் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அங்கு நாயின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் நாய் இறந்தது.

மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே நாய் இறந்ததாக கூறப்படும் நிலையில், நாய்க்கு மருத்துவம் பார்த்த ரஜித் மற்றும் லட்சுமி ஸ்ரீனிவாஸ் ஆகிய கால்நடை மருத்துவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் மீது தவறு இருப்பது நாயின் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்படும் பட்சத்தில், மருத்துவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments