நாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங்

0 539

இந்திய ராணுவத்தில் கடந்த 9 ஆண்டுகளாக சேவையாற்றி அண்மையில் உயிரிழந்த நாயின் மறைவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

டட்ச் (dutch) என்று அழைக்கப்பட்ட அந்த உயர் ரக இன ராய், இந்திய ராணுவத்தின் கிழக்குப் படைப்பிரிவு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின்போது தீவிரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த நாய் கடந்த 11ஆம் தேதி திடீரென உயிரிழந்தது. இதையடுத்து அந்த நாயின் மறைவுக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், நாட்டுக்கும், ராணுவத்துக்கும் சேவையாற்றி அண்மையில் இறந்த நாய் வீரர் டட்ச்சுக்கு பாதுகாப்பு அமைச்சர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்குப்படை பிரிவு வீரர்களும் நாய் டட்ச்சுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments