கள் இறக்கும் தொழில் செய்யும் முதல் கேரள பெண்

0 411

குடும்ப வறுமை காரணமாக, கேரளாவில் பெண் ஒருவர் கள் இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். கண்ணூர் மாவட்டம் பண்ணியோடு(Panniyode) பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஷூபா. இவரது கணவர் பனையேறும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

சாலை விபத்தில் அவர் படுகாயமுற்றதை அடுத்து, குடும்ப வறுமுறையை போக்க ஷீபா இந்த பனையேறும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தொடக்கத்தில் இந்த தொழிலை கற்றுக்கொள்வது சற்று சிரமமாக இருந்த போதிலும், தொடர் விடா முயற்சியால் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.

தற்போது, தனது வளர்ப்பு நாயுடன் விளைநிலங்களுக்கு சென்று, கள் இறக்கி நாளொன்றுக்கு 350 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, உயரத்தை பொருட்படுத்தாது தென்னை மரங்கள், ரப்பர் மரங்களிலும் ஏறி தனக்கு கொடுக்கப்படும் பணிகளை செய்து வருகிறார்.

துவக்கத்தில் இவரது முயற்சிக்கு சமூகத்தினர் பல காரணங்களை கூறி முட்டுக்கட்டை இட்டபோதும், தற்போது பலரும் அவரை விரும்பி பணிக்கு அழைக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments