இந்தி குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அபத்தமானது-பினராயி விஜயன்

0 273

இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரே மொழி இந்தி என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அபத்தமானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவை உலகளவில் அடையாளப்படுத்த ஒரு மொழி வேண்டும் என்றும், பரவலாக பேசப்படும் இந்தியே அதற்கு பொருத்தமானது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமித்ஷாவின் கருத்து ‘அபத்தமானது’ என விமர்சித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மொழியின் பெயரில் புதிய போராட்டக்களத்துக்கு அமித்ஷா வழிவகுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்கும் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்றும், தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்தி தெரியாது என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments