இன்று பொறியாளர் தினம்..! பிரதமர் மோடி வாழ்த்து

0 296

பொறியாளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி பொறியாளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பாரத ரத்னா விருது பெற்றவரும் மைசூர் அரண்மையின் திவானாக இருந்தவருமான விஸ்வேஸ்வரய்யா, கர்நாடக மாநிலம் முடெனஹள்ளி((Muddenahalli)) கிராமத்தில் பிறந்தவர். கிருஷ்ண ராஜ சாகர் அணை உள்பட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டுமானங்களை கட்டுவதற்கு சிறப்பான பங்களிப்பை அளித்த விஸ்வேஸ்வரய்யா, இந்திய பொறியியல் துறையின் முன்னோடி என போற்றப்படுகிறார். அவரது பிறந்தநாள், பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொறியாளர்கள் என்றால், விடாமுயற்சி மற்றும் உறுதி என்று பொருள்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். பொறியாளர்களின் வைராக்கியம் மற்றும் புதுமை படைக்கும் திறன் இல்லாவிடில் மனித சமுதாயம் முன்னேற்றம் அடையாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த நாளில் கடின உழைப்பாளிகளான பொறியாளர்களுக்கு வாழ்த்துகள் என்றும் பொறியாளர்களுக்கு முன்மாதிரியாக திகழும் விஸ்வேஸ்வராயாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments