மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்ற நிலையில் இறந்து கிடந்த பெண் சிசு

0 419

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி அரசுமருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் இன்று காலையில் கழிவறையை சுத்தம் செய்ய பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர்சென்றுள்ளார். அங்கு கழிவறை குழிக்குள் சிக்கிய நிலையில் பச்சிளம் சிசு ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். அவரும் செவிலியர் ஒருவரும் அந்த சிசுவை பிளாஸ்டிக் கவருக்குள் வாளியில் வைத்து எடுத்து வந்து பிரசவ வார்டில் சேர்த்தனர்.

அங்கு தலைமை மருத்துவ அலுவலர் அம்பிகா முன்னிலையில் பரிசோதித்ததில் அது பெண் சிசு என்றும், இறந்து கிடந்ததும் தெரியவந்தது. ஒன்றரை கிலோ எடையுள்ள அந்த சிசு குறை பிரசவத்தில் பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிசுவின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு உள்ளது. ததவல் அறிந்த போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் யாராவது கழிவறை சென்றபோது குறை பிரசவம் ஆனதா அல்லது வெளியில் இருந்து வந்து போட்டுச்சென்றார்களா என்று விசாரணை நடக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments