சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் ஆஸம்கான் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் -அகிலேஷ்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், சர்ச்சைக்குரிய எம்.பி. ஆஸம் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆஸம் கானுக்கு எதிராக, அரசு நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராம்பூரில் ஆஸம்கானின் குடும்பத்தினரை அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேசினார்.
பின்னர், நில ஆக்கிரமிப்பு புகாருக்கு ஆளாகியுள்ள, ஆஸம்கானின், முகமது அலி ஜவ்ஹர் பல்கலைக்கழகத்திற்கும் அகிலேஷ் யாதவ் சென்றார்.
சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆஸம்கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என அப்போது அவர் உறுதியளித்தார். தேவைப்பட்டால், ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து மாநில அரசின் அடக்குமுறை குறித்து புகார் தெரிவிக்கப் போவதாகவும் அகிலேஷ் தெரிவித்தார்.
Comments