சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ரூ. 7.65 கோடி ஒதுக்கீடு

0 340

சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்டவற்றிலும், கடலூர் மாவட்ட ஆறுகள், வெள்ளநீர் வடிகால்களில் சேரும் திடக் கழிவுகள் குப்பைகளால், வெள்ளப் பெருக்கு, நோய்ப் பரவல், உள்கட்டமைப்பு சேதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது. எனவே நீர் வழிகளில் தடையற்ற நீரோட்டத்தை உறுதி செய்ய அவற்றில் வண்டல், களைகள், குப்பைகள் அடைப்புகள், தடைகளை அகற்ற வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னதாக மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தைக் கருதி, அதற்காக 7 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 பணிகள், திருவள்ளுர் மாவட்டத்தில் 1 கோடியே  78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 பணிகள் காஞ்சிபுரத்தில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகள் கடலூர் மாவட்டத்தில் 2 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 பணிகள் என 7 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் 51 பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments