500 குடியிருப்புகளை காலிசெய்ய கெடு இன்று முடிகிறது.

0 593

கொச்சியின் மரடு புறநகர்ப்பகுதியில் அத்துமீறி கட்டப்பட்ட 500 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது.

15ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று அதற்கான தேதி முடிவடையும் நிலையில் யாருமே குடியிருப்பை காலி செய்யவில்லை.கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அறிவிப்பாணை செய்த பகுதியில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து கட்டுமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவ்வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் நோட்டீசை ரத்து செய்தது. கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் வரும் 20ம் தேதி அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குடியிருப்பு வாசிகள் இதனால் பெரும் வேதனையடைந்து உள்ளனர். தனியாக காலி செய்ய முடியாது என்றும் ஒட்டுமொத்தமாக அனைவரும் இப்பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் சட்டரீதியான முறையீடு செய்ய ஆலோசிப்பதாகவும் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments