இந்தி மொழி பல்வேறு அழகான அம்சங்களை கொண்டுள்ளது - பிரதமர் மோடி

0 506

பல்வேறு அம்சங்களை இந்தி மொழி அழகாகக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ஏற்றது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. ஆட்சி மொழித்துறை என்ற பிரிவு இவ்விழாவினை நடத்துகிறது.

இந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. முதன்முதலாக, 1975ம் ஆண்டு இவ்விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மொழியின் எளிமை, தனித்துவம், மொழியின் தரம் ஆகியவையே உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு அர்த்தம் அளிக்கின்றன என்ற அவர், இதுபோன்ற பல்வேறு அம்சங்களை இந்தி மொழி அழகாகக் கொண்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments