இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து - அமைச்சர் MC சம்பத்

0 205

இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து என்றும் உலகளாவிய அளவிலேயே பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில்தான் இருப்பதாகவும் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்திருக்கிறார்.

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் உள்ள புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற "வீட்டுக்கொரு தொழில்முனைவோர்! கிராமத்திற்கு ஒரு ஆடிட்டர்! " என்ற  இலவச கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து மாதம்தோறும்  தமிழக முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் தொழில் துவங்க முன் வருபவருக்கு விண்ணப்பித்த இருபது நாட்களில் தொழில் துவங்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்  அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments