தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது , மின்வெட்டும் இருக்காது -தங்கமணி

0 212

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆவாரங்காடு ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடைபெற்றன.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 27 மாணவ-மாணவிகளுக்கு 58 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

பொதுமக்களிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் தங்கமணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடைபெற்று வரும் வாக்காளர் சரி பார்க்கும் திட்ட முகாமையும் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்துடன் பார்வையிட்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர் மேன், கேங் மேன், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் தங்கமணி, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு மின்வாரியத்தில் இருந்து விரைவில் வெளியிடப்படும் என கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments