செங்குத்துப் பாறையில் செங்குத்தாகவே இறங்கும் வரையாடுகள்

0 465

சீனாவில் புவியீர்ப்பு விசைக்கே சவால் விடும் வகையில் வரை ஆடுகள் செங்குத்துப் பாறையில் நடந்து செல்வது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த்யுள்ளது.

திபெத்தியப் பீடபூமியில் உள்ள கேட்ஸ் பள்ளத்தாக்கில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மிகவும் செங்குத்தான பாறையில் இமயமலை வரையாடுகள் அனாசயமாக ஓடிவருவதைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர்.

பொதுவாக வரையாடுகள் பாறைகளிலும் குன்றுகளிலும் விரைவாக ஏறவோ, இறங்கவோ முடியும், ஆனால் வழக்கத்தை விட வரையாடுகள் செங்குத்தாக இறங்கி வருவது பெரும் ஆச்சரியமளிப்பதாகவும், இது புவியீர்ப்பு விசைக்கே சவால் விடும் வகையில் இருப்பதாகவும் விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments