ரஜினி, அஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததால் நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும், அது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக நிர்வாகியின் இல்ல புதுமனை புகுவிழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வெளிநாட்டு பயணம் குறித்து குறை கூறுபவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க மாட்டார் என்றும், தாங்கள் தான் பதில் கூறுவோம் என்றும் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், அஜீத்குமார் போன்றோர் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம் எனவும், நடிகர் விஜய் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Comments