ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை - காமராஜ்

0 540

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுடனான மாநில கலந்தாய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் இணையும் போது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித நடைமுறை சிக்கலும் இல்லை எனக் கூறிய அவர், இதன் மூலம் மாநில அரசுக்கு நிதிச்சுமையும் ஏற்படாது என குறிப்பிட்டார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தில் தமிழகம் இணையும்போது எந்த ஒரு பாதிப்பும் இல்லை. வெளி மாநிலத்தவருக்கு அரிசி மற்றும் கோதுமை ஆகிய இரு பொருட்கள் மட்டுமே தேசிய உணவு கொள்கையின் கீழ் வழங்கப்படும் என்றார்.

மேலும் அந்த உணவுப் பொருட்களை மத்திய அரசிடம் முழுமையாக பெற்று வழங்குவதால் மாநில அரசுக்கு எந்த ஒரு நிதி சுமையும் இல்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் எவ்வித நடைமுறை சிக்கலும் இல்லை என்று  அமைச்சர் விளக்கமளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments