குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

0 211

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 17 மாதங்களாக அரிசி வழங்கப்படாததால், அதற்கான பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற 39 மாதங்களில் 17 மாதங்களுக்கு இலவச அரிசியும், 5 மாதங்களுக்கு அரிசிக்கு பதிலாக பணமாகவும் வழங்கப்பட்டது. இதில் கடந்த 17 மாதகாலமாக இலவச அரிசி மற்றும் அரிசிக்கான பணம் என எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 17மாத காலமாக அரிசி வழங்கபடாததால் அதற்கான பணத்தை பயனாகளின் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் அக்கட்சியின் மாநிலத்தலைவர் சாமிநாதன் தலைமையில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகையின் போது காவல்துறையினர் ஏற்படுத்திய தடுப்புகளை மீறி குடிமைபொருள் அலுவலகத்தில் நுழைய முயன்றதால் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரியில் போலி ரேஷன் கார்டு பயண்படுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமியே பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார், ஆகையால் போலி ரேஷன் கார்டுகளை உடனடியாக கண்டறிந்து அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments