தவறவிடப்பட்ட பயணியின் தங்க, வைர நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..!

0 277

சென்னையில், தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கப் பணத்துடன், ஆட்டோவில் தவறவிடப்பட்ட பயணியின் சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கடந்த 8ஆம் தேதியன்று, ஆட்டோ ஓட்டுநரான பத்மநாபன் என்பவர் தனது ஆட்டோவில் தவற விடப்பட்ட ஒரு சூட்கேசை தலைமைச் செயலக காலனி காவல் நிலைத்தில் ஒப்படைதுள்ளார்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அழகு சாதன பொருட்கள் இருந்துள்ளன. போலீசார் விசாரணையில், அந்த சூட்கேஸ் ராஜஸ்தான் மாநிலம் பின்மால் பகுதியை சேர்ந்த நீத்து என்ற பெண்ணுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

உறவினர்களை பார்ப்பதற்காக சென்னை வந்த அந்த பெண், தமது ஊருக்கு திரும்புவதற்காக, ரயில் நிலையம் செல்வதற்கு ஆட்டோவில் பயணம் செய்தபோது சூட்கேஸை ஆட்டோவிலேயே தவறவிட்டுள்ளார்.

பின்னர் இதுகுறித்து உறவினர்கள் மூலம் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்ட தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவினர்களிடம் சூட்கேசை ஒப்படைத்தார்.

மேலும் சூட்கேசை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரான பத்மநாபனை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments