தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 443

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக புவியரசன் கூறினார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் சாதகமான சூழ்நிலை ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழையால் இதுவரை தமிழகத்திற்கு 26 சென்டி மீட்டர் மழைப்பொழிவு கிடைத்திருக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது வரை 25 சென்டிமீட்டர் கிடைத்திருப்பதாகவும், சென்னைக்கு 36 சென்டிமீட்டர் மழைப்பொழிவுக்குப் பதில் 42 சென்டிமீட்டர் மழைப்பொழிவு கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

தென்மேற்குப் பருவமழை 10 நாட்களுக்குப் பிறகே ராஜஸ்தானில் இருந்து படிப்படியாகக் குறையும் என்றும் அக்டோபர் முதல் வாரத்திலேயே தென்மேற்குப் பருமழை முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 14 சென்டிமீட்டரும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 13 சென்டிமீட்டரும், திருத்தணியில் - 11 சென்டிமீட்டரும், சங்கராபுரத்தில் 8 சென்டிமீட்டரும், காட்டுமன்னார் கோவிலில் 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments