திருப்பதி அருகே சொகுசு பேருந்தும் மினி சரக்குவேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி

0 167

திருப்பதி அருகே சொகுசு பேருந்தும் மினி சரக்குவேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரொட்டி பண்டிகையில் குடும்பத்துடன் பங்கேற்றுவிட்டு கர்நாடக மாநிலம் முல்பாகலை சேர்ந்த 8 பேர் மினி சரக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சந்திரகிரி காசிபண்டா அருகே சென்று கொண்டிருக்கும்போது பெங்களூருவில் இருந்து திருப்பதி சென்ற கர்நாடக அரசின் சொகுசு பேருந்து, முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றதாகவும் அப்போது எதிரே வந்த மினி சரக்கு வேன் மீது சொகுசு பேருந்து அதிவேகமாக மோதியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தநிலையில் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சந்திரகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments