லடாக் எல்லையில் இந்திய -சீனப் படைகள் மோதல்

0 746

லடாக் எல்லை அருகே இந்திய-சீனப் படைகளுக்கு இடையே மோதல் உருவானது. இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் காணப்பட்டது.

134 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாங்- காங் த்சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள நிலப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

புதன்கிழமை அதிகாலையில் இந்திய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை எதிர்கொண்ட சீன ராணுவத்தினர் இப்பகுதி எங்களுக்கு சொந்தம் இங்கே வரக்கூடாது என்று தடை விதித்தனர்.

இதற்கு இந்திய வீரர்கள் இது தங்களுக்குட்பட்ட பகுதிதான் என்று கூற கடும் மோதல் உருவானதையடுத்து மீண்டும் எல்லைப் பிரச்சினை தலைதூக்கியது. மாலை வரை இந்த மோதல் போக்கு நீடித்தது. இதனையடுத்து பிரிகேடியர் மட்டத்திலான ராணுவ உயரதிகாரிகள் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இத்தகைய சூழலில் சீன அதிபர் சீ ஜின்பிங் இந்தியா வரும் போது அருணாசலப்பிரதேச்தில் இந்திய படைகள் ஹிம் விஜய் என்ற போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன.இதுவும் இருநாட்டு எல்லைப் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments