வருமான வரி கெடுபிடிகளை குறைக்க முடிவு

0 353

வருமான வரித்துறையினர் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்பப்பெறுவதற்கும் வருமான வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கைகளிலும் விதிகளை தளர்த்த மத்திய நேரடி வரிவிதிப்புகள் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு செப்டம்பர் 9ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை எடுப்பதற்கான காலகெடுவை நிர்ணயம் செய்துள்ளது. பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அத்தொகை 25 லட்சம் ரூபாய்க்குட்பட்டிருந்தால், கடைசி தேதியை தாண்டி 60 நாட்களுக்குள் செலுத்தப்பட்டால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாது. தொடர்ந்து வரியை செலுத்தாமல் தாமதம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும் கொலீஜியம் பரிந்துரைத்த இரண்டு உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வர்.

கடந்த மாதத்தில் தமது டிவிட்டர் பதிவில் நேர்மையாக வரிசெலுத்துவோருக்கு எந்த வித தொந்தரவும் இருக்காது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்து இருந்தார்.சிறிய விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கையை தவிர்க்குமாறும் அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்தியிருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments