தர்பார் படம் நன்றாக வந்துள்ளதாக ரஜினிகாந்த் பேட்டி

0 512

தர்பார் திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. அந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய ரஜினி, பொங்கல் பண்டிகையன்று தர்பார் படம் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே தர்பார் படத்தின் 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments