பல பெண்களுடன் தொடர்பு கொண்டவர் வெட்டிக் கொலை

0 443

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பல பெண்களுடன் பழகிய தந்தையை மகனே வெட்டிக் கொலை செய்தார்.

கரையான் பட்டி என்ற இடத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின், 2வது திருமணம் செய்தார். அவருக்கு 25 வயதுடைய முத்துப்பாண்டி என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் 2வது மனைவியுடன் பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறிய குபேந்திரன் வைகை அணை கரையில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கும் குள்ளபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குபேந்திரன் கடந்த திங்கள்கிழமை மாலை அவரது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வைகை அணை போலீசார் விசாரணை நடத்தியபோது, முத்துப்பாண்டியே தனது தந்தை குபேந்திரனை கொன்றது தெரியவந்தது. குபேந்திரனுக்கு பல பெண்களுடன் பழக்கம் இருந்ததாகவும், எனவே சொத்துக்கள் பறிபோய் விடும் என்ற பயத்தில் அவரைக் கொன்றதாகவும் முத்துப்பாண்டி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments