இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வார்கள்

0 715

நிலவில் தரையிறங்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் தொடர்பை புதுப்பிப்பார்கள் என்று நோபல் பரிசு பெற்றவரும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவருமான இயற்பியல் வல்லுநருமான டாக்டர் செர்கே ஹாரோச்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சந்திரயான் 2 விண்கலத்தின் அங்கமான விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்கு முன் தொடர்பு துண்டிக்கப்பட்டு, மேற்பரப்பில் விழுந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில். கடைசி கட்டம் வரை விக்ரம் லேண்டர் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் செர்கே ஹாரோச்சி, ஏதோ ஒரு இடத்தில் திட்டம் தோற்றுப் போனது என்று குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே உள்ள மோஹாலியில் நோபல் பரிசு கமிட்டியின் இந்திய ஆலோசனைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் விஞ்ஞானம் சில நேரங்களில் வெற்றியையும் சில நேரங்களில் தோல்வியையும் சந்திப்பது இயல்பானதுதான் என்றார். ஆயினும் நிலவு குறித்த இந்தியாவின் முதல் ஆய்வில் ஏற்பட்ட கோளாறை இஸ்ரோ விஞ்ஞானிகள் சரி செய்து விடுவார்கள் என்றும் செர்கே ஹாரோச்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கலிபோர்னியாவை சேர்ந்த டேவிட் திர்ரேலி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஒன்று பெங்களூர் வந்துள்ளது. இஸ்ரோ தலைவர் சிவனை சந்தித்த இக்குழுவினர் விக்ரம் லேண்டருடான தகவல் தொடர்பை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments