நல்ல சாலைகளால்தான் விபத்துகள் ஏற்படுகின்றன

0 315

விபத்துக்குக் காரணம் மோசமான சாலைகளல்ல, நல்ல சாலைகளே என கர்நாடக துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரதுர்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சாலை மோசமாக இருக்கும் போது, போக்குவரத்து விதி மீறலை காரணம் காட்டி அபராதம் மட்டும் அதிகளவில் வசூலிக்கலாமா? என்று, பரவலாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கோவிந்த், விபத்துக்கள் நடப்பது நல்ல நெடுஞ்சாலைகளில் மணிக்கு100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்போதுதானே தவிர மோசமான சாலைகளால் அல்ல என்றார். மேலும் தனக்கும் அதிக அபராதம் வசூலிப்பதில் விருப்பமில்லை எனவும், அமைச்சரவை கூடி அதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுப்பணித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான கோவிந்த் கர்ஜோல் கூறியுள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் உள்ள தர்க்கத்தை விளக்கிக் கூறுமாறு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments