400 ஹெலிகாப்டர்களை சோதிக்க ஏர்பஸ் நிறுவனம் உத்தரவு

0 277

நார்வேயில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, உடனடியாக 400 ஹெலிகாப்டர்களை தரப்பரிசோதனை செய்ய ஏர்பஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எஞ்சினுக்கும் மெயின் கியர்பெட்டிக்கும் இடையிலான இணைப்பை ஆராயுமாறு தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் டெலிவரி செய்யப்பட்ட H 125 , AS 550 , H130 போன்ற பல்வேறு மாடல்களில் சுமார் 400 ஹெலிகாப்டர்களிலும் இச்சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. விபத்துக்கான காரணத்தை அறிய இந்த சோதனை நடத்தப்படுவதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments