கொள்ளிடத்தில் தவித்த 36 பேர் பத்திரமாக மீட்பு..!

0 673

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் தத்தளித்த 41 பேரை தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன்  உயிருடன் மீட்டனர்.

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குடிகாடு மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 41 பேர் அரியலூர் மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள தீவான ராமநல்லூரில் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள ஒரு படகில் சென்றனர்.

அவர்கள் அனைவரும் மீண்டும் திரும்பும் போது படகின் மோட்டார் (புரொஃபல்லர்) பழுதானதையடுத்து, படகு அதன் போக்கில் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, படகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு தடுமாறியதால், படகு கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த 41 பேரும் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த கும்பகோணம், பாபநாசம் கோட்ட தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் 16 பேரை மீட்டு பாபநாசம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சம்பவம் நிகழ்ந்த குடிகாடு கிராமத்திற்கு வந்து கொட்டும் மழையிலும் மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.

மேலும் ஆற்றில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சியவர்கள் அரியலூர் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments