ராஜஸ்தான் மாநில லாரி உரிமையாளருக்கு ரூ. 1,41,700 அபராதம்

0 529

போக்குவரத்து விதிகளை மீறியதால், ராஜஸ்தானைச் சேர்ந்த சரக்கு லாரி உரிமையாளருக்கு 1.41 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிமுறைகளை மீறுவோருக்கு அதிக அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பகவான் ராம் என்பவருக்கு சொந்தமான லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை இட்டனர். அப்போது லாரியில் அளவுக்கு அதிகமாக சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

மேலும் உரிய அனுமதி இன்றி சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த தும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பகவன் ராமுக்கு 1,41,700 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அதனை அவர் டெல்லி நீதிமன்றத்தில் செலுத்தி லாரியை மீட்டார். ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக லாரி ஓட்டுநருக்கு 86,500 ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments