சொந்தமில்லாத நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.5.5 கோடிக்கு விற்று மோசடி

0 526

சொந்தமல்லாத நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து பணமோசடி செய்த வழக்கில், சென்னை தாம்பரம் நகர கூட்டுறவு சங்க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு தாம்பரம், இரும்புலியூரை சேர்ந்தவர் மாணிக்கம். தாம்பரம் நகர அதிமுக முன்னாள் பொருளாளராக இருந்த இவர், தற்போது தாம்பரம் நகர கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். அண்மையில் மாணிக்கம், அவரது மருமகன் குமார், மைத்துனர் மணி மற்றும் அதே பகுதியை சேர்ந்து முத்து, அவரது மகன் எட்வின் ஆகியோருடன் சேர்ந்து இரும்புலியூரில் உள்ள சுமார் 1 புள்ளி 8 ஏக்கர் நிலத்தை தனது நிலம் என கூறி கோவையை சேர்ந்த தொழிலதிபருக்கு விற்றதாக கூறப்படுகிறது.

சுமார் ஐந்தரை கோடி ரூபாய் கொடுத்து அந்த நிலத்தை வாங்கிய தொழிலதிபர், கடந்த சில நாட்களுக்கு முன் நிலத்தை சுற்றி சுற்றுசுவர் எழுப்ப வந்துள்ளார். அப்போது அது வேறொருவரின் நிலம் என தெரியவந்ததோடு, அந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து மாணிக்கம் நிலமோசடி செய்ததாக தொழிலதிபரின் மனைவி விசித்திரா என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர், மாணிக்கம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள எட்வினை தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments