அ.தி.மு.க. ஆட்சியில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் - முதலமைச்சர்

0 593

திமுக ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை 3 தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 26 ஆயிரம் கோடிதான் என குறிப்பிட்டார். ஆனால் அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில், 2 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கும் மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு தொழில் முதலீட்டின் மூலம் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சி காலத்தில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், அ.தி.மு.க. அரசை விமர்சிக்க மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை எனவும் குறிப்பிட்டார்.
காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை மேலும் மூன்று தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீர் மேலாண்மை மேற்கொள்ளவும், உபரி நீரை சேமிக்கவும் தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மோட்டார் வாகன சட்டம் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் தடுக்கப்படும் என்ற முதலமைச்சர், மத்திய அரசின் சட்டத்தை பரிசீலனை செய்து முறையாக அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
வெளிநாடுகளில் ஒரு சாலையில் 10 ,12,16 வழிதடங்கள் இருக்கின்றன என்றும், தமிழகத்தில் 8 வழித்தடங்கள் என்றாலே போராட்டம் நடத்துவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments