தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தததால் மக்கள் மகிழ்ச்சி..!

0 559

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெப்பம் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில், திடீரென பலத்த காற்று வீசி, கனமழை பெய்ய தொடங்கியது.

சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதேபோல் பழைய சூரமங்கலம் புதுரோடு,சேலம் சின்ன கடை வீதி, பட்டை கோவில், அம்மா பேட்டை, சீலநாயக்கன்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. காலை வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் குளிர்ந்த காற்று வீசி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்கராபுரம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், சின்னசேலம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கின.

மேலும், கள்ளக்குறிச்சியிலிருந்து-சென்னை செல்லும் சாலையில் சாக்கடை நீருடன் மழைநீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை கனமழை கொட்டி தீர்த்தது. லேசாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக உருவெடுத்ததால் மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.

கனமழையால் நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரிக்கவே, விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். மழைக்காலங்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு சென்றனர்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியிலும் பலத்த மழை பெய்தது. 

செவல்பட்டி, மந்திரி ஓடை, வக்கணாங் குண்டு போன்ற பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. காரியாப்பட்டி மேல்நிலைப் பள்ளி முன், மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

பல நாட்களுக்கு பிறகு இப்பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கல்லங்கட்டுவலசு, எதிர் மேடு, வட்டமலை மற்றும் எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அப்பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது. இதேபோல் பள்ளிபாளையம், ஆலாம்பாளையம், அலமேடு, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments