ஏலத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள்

0 338

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அலுவல் ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும், உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும், அவருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் பரிசுகள் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம், ஆயிரத்து 800 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள் வரும் 14ஆம் தேதி முதல் ஏலம் விடப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிவித்துள்ளார்.

ஓவியங்கள், கலை பொருட்கள், சால்வைகள் உட்பட மொத்தம் 2 ஆயிரத்து 772 பொருட்கள் டெல்லியில் உள்ள மாடர்ன் ஆர்ட் கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஒரு மாத காலத்திற்கு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஏலத்தில் விடப்படும் பொருட்களின் அடிப்படை விலை குறைந்தபட்சம் 200 ரூபாயாகவும், அதிகபட்சம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையும் நிர்ணயிக்கபபட்டுள்ளது. இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக வழங்கப்பட உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments