ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மீது உறவினர்கள் தாக்குதல்

0 442

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உறவினர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கரட்டுபட்டி ரைஸ் மில்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது உறவினரான செல்வம் என்பவரிடம் தென்னந்தோப்பை விலைக்கு வாங்க 16 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார் சுப்பிரமணியன்.

ஆனால் பணத்தை பெற்ற செல்வம் தென்னந்தோப்பை கிரையம் செய்து கொடுக்காமலும் பணத்தை திரும்ப தரமாலும் அலைக்கழித்து வந்துள்ளார். இவ்விவகாரத்தை ஊர் பெரியவர்களிடம் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையறிந்த செல்வம் கடந்த 5ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுப்பிரமணியனை வழிமறித்து உறவினர்களுடன் சேர்ந்து கட்டைகளால் தாக்கினார்.

இந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றிய சோழவந்தான் போலீசார், தாக்குதல் நடத்திய செல்வம், தாக்குதல் நடத்த தூண்டியதாக அவரது மனைவி கவிதா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான உறவினர் பிரகாஷ் என்பவர் தேடப்பட்டு வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments