நெல்லை மாவட்டதில் நிலப்பிரச்சனை தொடர்பாக ஒருவர் வெட்டிக் கொலை

0 255

நெல்லை மாவட்டம் மானூர் அருகே திருவிழாவைக் காண  ஊருக்கு வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானூர் அடுத்த தெற்குபட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து என்கிற முருகன் . இவர் கடந்த 15 ஆண்டுகளாக மும்பையில் உள்ள உணவு விடுதியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்த பேச்சிமுத்து நள்ளிரவு வீட்டின் முன்பு படுத்திருந்தார்.

அப்போது வந்த மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது. தகவலறிந்த மானூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு வல்லவன்கோட்டையில் உள்ள  6 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக பேச்சுமுத்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கூட இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் நிலப்பிரச்சனை  காரணமாக கொலை நடந்ததா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments