காவிரி கூக்குரல் என்ற பெயரில் சத்குரு மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி தமிழகம் வந்தது

0 156

காவிரி கூக்குரல் என்ற பெயரில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன பேரணி தமிழகம் வந்தடைந்தது.

காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும் அதை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி பகுதிகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கர்நாடக மாநிலம் தலைகாவேரி முதல் தமிழகத்தின் பூம்புகார் வரை, செப்டம்பர் 3ஆம் தேதி சத்குரு பேரணி தொடங்கினார். 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை வந்தடைந்துள்ளது.

அங்கு சத்குருவிற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காவேரி கூக்குரல் குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர் பிரபாகரன், முன்னாள் மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நடிகை நித்தியா மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்குரு, காவேரி கூக்குரல் தமிழர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதை உணர முடிவதாக கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments