வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலினுக்கு வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கையை கொடுப்போம்

0 372

அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தாங்கள் வெள்ளை அறிக்கையும் கொடுப்போம், மஞ்சள் அறிக்கையும் கொடுப்போம், பச்சை அறிக்கையும் கொடுப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு சென்றார். அப்போது அவருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிகப்பெரிய தொழிற்புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவிலேயேமுதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்ட தமிழக முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தெரிவித்தார். தமிழர்களின் உரிமைக்குரலாக அமெரிக்காவில் சென்று பேசிய முதலமைச்சரை பார்த்து தமிழக மக்கள் பெருமைப்படுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்தது பெருமையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். டிடிவி தினகரன் குறித்து பேசிய அவர், டிடிவி தினகரன் எம்ஜிஆர் ரசிகரே இல்லை எனவும் அவர் சிவாஜி கணேசன் ரசிகர் என்கிற உண்மை தனக்கு தெரியும் என்றும் கூறினார். டிடிவி தினகரன் விரைவில் திமுகவில் இணைவார் எனவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments