கொள்ளிடம் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

0 181

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் இருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீர், இன்னும் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை என்றும், கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது போல, இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த, கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், உள்ளூரில் உள்ள நீரை கடலில் கலக்க அனுமதித்து விட்டு, "இஸ்ரேல் போகிறேன்" என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வது வேடிக்கை வினோதமாக இருக்கிறது என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments