MLA வெங்கடாசலம் மகன் திருமணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்

0 468

சேலம் மேற்கு தொகுதி எம் எல் ஏ வெங்கடாசலம் மகன் திருமணத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திவைத்தார்.

சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் மகன் ஜனார்த்தனன் மற்றும் தொழிலதிபர் சண்முகத்தின் மகள் சவுந்தர்யா திருமணம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மணமகனுக்கு தாலி எடுத்து கொடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்த நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நேற்று இரவு நடைபெற்ற மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுகல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments