மீண்டும் வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் ஆக டேனியல் கிரெய்க்

இத்தாலியில் படம் பிடிக்கப்பட்டு வரும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளிவராத நிலையில் தற்போது "No Time to Die" என்ற புதிய படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் முக்கிய அடையாளமான ஆஸ்டன் மார்டின் காரில் மாறி மாறி விரட்டிச் செல்லும் காட்சிகள் இத்தாலியில் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.
டேனியல் கிரெய்க் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக வலம் வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே அவர் நடித்து 2015ல் வெளியான ஸ்பெக்ட்ரா படம் 880 மில்லியன் டாலர்களையும், 2012ல் வெளியான ஸ்கைஃபால் படம் ஒரு பில்லியன் டாலர் வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Comments