புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு

0 815

பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இத்திரைப்படம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தேர்வாகியுள்ளது.

புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்பட விழா-2019- ஐந்து  நாட்களுக்கு புதுச்சேரி முருகா திரையரங்கில் நடைபெறுகிறது.வரும் 13ம் தேதி மாலை முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில் சங்கரதாஸ்சுவாமிகள் விருதை முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார்.  2018ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை  பரியேறும் பெருமாள்  திரைப்படத்துக்காக அப்படத்தின்   இயக்குநர் மாரி செல்வராஜ் பெறுகிறார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் விழாவில் தரப்படுகிறது. அன்றைய தினம் மாலை இத்திரைப்படத்தையும் இலவசமாக பார்க்கலாம்.

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை அரசு அத்திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்தை தேர்வு செய்து விருது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments