கைபுள்ளை காமெடி போல புலம்பும் நித்தியானந்தா..!

0 1033

மீடியாக்கள் தன்னை வைகை புயலாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் வசனத்தை பேசி தனது சிஷ்ய கோடிகளுக்கு அருளாசி வழங்கி வருகிறார்

பாஸ்போர்ட் முடக்கத்தால் வெளி நாடு செல்ல முடியாமல் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திலேயே முடங்கி கிடக்கும் நித்தியானந்தா தினமும் யூடியூப் வீடியோவில் தோன்றி தனது சிஷ்ய கோடிகளுக்கு விஞ்ஞான ரீதியாக அருளாசி வழங்கி வருகின்றார்.

அந்தவகையில் அண்மையில் அருளாசி வழங்கிய நித்தி , வடிவேலுவின் வின்னர் பட நகைச்சுவை காட்சியை நினைவுப்படுத்தி கலகலப்பூட்டினார்..!

அதே போல காலில் செருப்பு அணியாமல் நடந்தால் மட்டுமே பூமாதேவியின் மூலம் நேரடியாக பல சக்திகள் உடலுக்கு கிடைக்கும் என்றும் புத்தி சொல்கிறார் நித்தி

நாட்டில் ஆளுக்கு ஆயிரம் பிரச்சனையோட பலர் சுத்திக் கிட்டு இருந்தாலும், நித்தியானந்தாவோ நாளுக்கு ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து இது போல அறிவுப்பூர்வமாக அருளாசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments