மன்மத ஆசிரியருக்கு பள்ளியில் தர்ம அடி..! ஊர் கூடி உரித்தனர்

0 606

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சத்துணவு பெண் அமைப்பாளருடன், பள்ளியில் எல்லை மீறிய காதலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரை, வகுப்பறைக்குள் புகுந்து பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த உடுப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ள சரவணன் என்பவர் தான் மக்களால் சிறப்பு கவனிப்புக்குள்ளானவர்.

சரவணனுக்கும், அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்து வரும் ஜெயந்தி என்பவருக்கும், நெருக்கமான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று ஆசிரியர் சரவணனும் , ஜெயந்தியும் எல்லைமீறிய காதலில் தனிமையில் இருப்பதை பார்த்ததாக, பள்ளிச்சிறுவன் ஒருவன் வீட்டில் தெரிவிக்க உடனடியாக திரண்ட பொதுமக்கள் உடுப்பம் அரசு பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு ஆசிரியர் சரவணனும், ஜெயந்தியும் இல்லை இதனால் பள்ளி வளாகத்திற்குள் தேடியுள்ளனர்.

அப்போது ஜெயந்தியுடன் பள்ளிக்கூட கழிவறையில் இருந்து வெளியே வந்த ஆசிரியர் சரவணன், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்டு, ஜெயந்தியை அங்கிருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பிச்செல்ல உதவியுள்ளார். மேலும் இதனை பொதுமக்கள் பார்த்திருக்கமாட்டார்கள் என்று நினைத்து தனது வகுப்பறைக்கு சென்றுள்ளார் சரவணன். அவரை பின் தொடர்ந்து வகுப்பறைக்குள் நுழைந்த பொது மக்கள் ஜெயந்தி எங்கே ? என்று கேட்டு, சரவணனை பிடித்து அடித்து உதைத்தனர்

அத்தோடு விடாமல் ஆசிரியர் சரவணனை கையைப்பிடித்து வெளியே இழுத்து வந்த பொதுமக்கள் ஒன்று கூடி சரமாரியாக தாக்கி அமரவைத்தனர். இனி பள்ளிக்குழந்தைகளின் மனதை கெடுக்கும் வகையில் நடந்து கொள்வாயா ? என சத்தமிட்டு சரமாரியாக தாக்கினர்

இது குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் பொதுமக்களிடம் இருந்து ஆசிரியர் சரவணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆசிரியர் சரவணனிடம் நடத்திய விசாரணையில் ஜெயந்தி அஞ்சலக மாதந்திர சேமிப்பு கணக்கிற்கு என்று சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு, 6 மாதங்களாக முறையாக பணம் செலுத்தவில்லை என்றும் அதற்கு தான் உடந்தையாக இருப்பதாக நினைத்து தன்னை பொதுமக்கள் தாக்கியதாக சரவணன் தெரிவித்தார்.

எது எப்படி இருந்தாலும் முன்பை போல இல்லாமல் மோசடி நபர்களையும் ,அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்களையும் தேடிச்சென்று உதைக்கும் மனப்பக்குவம் மக்களிடம் தற்போது அதிகரித்து வருகின்றது என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!

இதனிடையே பொதுமக்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணனை விசாரணைக்காக புதுச்சத்திரம் காவல்நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸார் விடுவித்து விட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பகுதி மக்களையும் காவல்நிலையத்துக்கு புதுச்சத்திரம் போலீஸார் அழைத்துள்ளனர்.

இந்நிலையில் போலீஸாரால் விடுவிக்கப்பட்டதும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆசிரியர் சரவணன் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். அதேநேரத்தில், ஆசிரியர் சரவணன் மீதான குற்றச்சாட்டு உண்மையா, இல்லையா என்பதை அறியும் வகையில் அதுகுறித்து விசாரணை நடத்தும்படி புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணனுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments