தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதத்துடன் இலவச தலைக்கவசம்

0 890

ஒடிசா மாநிலத்தில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், அவர்களுக்கு இலவச தலைக்கவசமும் வழங்கப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்ட திருத்தம் கடந்த 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன் மூலம், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தலைக்கவசம் அணியாது இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை தடுக்க வித்தியாசமான அணுகுமுறையை அங்குள்ள போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

அந்த வகையில், தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் போலீசார், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசங்களையும் வழங்கிவருகின்றனர்.

அத்துடன், தலைக்கவசத்தை முறையாக அணிந்து சாலை விதிகளை கடைப்பிடிக்கும் வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்தும் வண்ணம், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு வாழ்த்து அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments